Saturday, August 9, 2025

உனக்கென நீ!

கோடிகளில் ஒருத்தியாய்..

உனக்கென நீ பிறந்தாய்!

கோபுரத்தின் உச்சியாய்..

உனக்கென நீ வளர்ந்தாய்!

வெண்பனியில் மின்னும் ஒளியாய்..

உனக்கென நீ சிரித்தாய்!

தாமரையின் இதழாய்..

உனக்கென பூ மலர்ந்தாய்!

அறிவின் அறிவாய்..

உனக்கென படித்தாய்!

உனக்காய்.. உனக்காய்..

உனக்கென வாழ்ந்து மகிழ்ந்தாய்!

பருவங்கள் ஓடின!!

 

நிற்க!

என்றும் நீ என் குமாரி தான்!

பருவம் என காலங்களை குறித்தேன்!!

 

பருவங்கள் ஓடின..

உனக்கென நானானேன்!

எனக்கென நீயானாய்!!


மீண்டும் நிற்க..

இது காதல் கவிதையல்ல..

 

பருவங்கள் ஓடின..
உனக்கென நானானேன்!
எனக்கென நீயானாய்!!

நமக்கென சிரித்தாய்..

நமக்கென அழுதாய்..

நமக்கென குதுகளித்தாய்..

உனக்கே தெரியாமல் உனக்காய் நீயிருந்து காலங்களானதோ என் தங்கமே?

 

இன்று..

உனக்கென சிரித்தாய்!

உனக்கென மகிழ்ந்தாய்!

உனக்கென ஆடினாய்!

உனக்கென நட்புறவாடினாய்!

 

உனக்கென கவிதை எழுத என் மனதும் மூளையும் மீண்டும் இன்று போட்டியிட்டது!

நீ உனக்கென மீண்டும் இருந்த இந்நாளில்!!


 

 

 

 

 

Monday, November 20, 2023

ஆனந்தத் தொல்லை

கடுப்பான குந்தவி அவனிடம், "கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தால் என்னவாம். காது வலிக்கிறது", என்று கடிந்து கொண்டாள்.

வந்தியன் வாய் சும்மா இருக்குமா என்ன, "சரி நான் பேசாமல் இருக்கிறேன். ஆனால் அது வரைக்கும் நீ பேசு", என்று வம்பிழுத்தான்.

 'அய்யோ.. இது என்னடா வம்பா போச்சு. இது தெரிந்திருந்தால் நான் அடுத்த பஸ்ல வந்துருப்பேன்', என்று தனக்குள் புலம்பிக்கொண்டு, "கொஞ்சம் பேசாமல் வாயேன்; உனக்கு புண்ணியமா போகும்", என்று கெஞ்சினாள்.

அதற்கு வந்தியன், "இப்படி தான் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்றால் அது தேவை இல்லை. நான் பாவக்காரனாகவே இருந்து விட்டு போகிறேன்", என்று சடைந்து கொண்டு, "சரி, ஒரு போட்டி வைத்துக் கொள்வோம் அடுத்து யார் பேசுகிறாரோ அவர் பஸ்ஸில் இருந்து இறங்கி விட வேண்டும்", என்றான்.

அதற்கு குந்தவி, "அடேய் சமார்த்தியகாரா.. அடுத்து 10 நிமிசத்தில உன்னோட ஸ்டாப் தான் வருகிறது நீ இறங்கி தான் ஆகவேண்டும். இனி நீ பேசினால்...", என்று யோசிக்க துவங்கினாள் அவள்.

உடனே அவன், "தோற்று போனால் மல்லிகை பூ வாங்கி தரவா", என்றான் ஒரு வித நகைப்புடன்.

"ம்ம்ம் ஆசைதான்.. பூ வாங்கும் வேலை எல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம். இங்கே தோற்று போனவர் அதற்கு அடையாளமாய் 100 ரூபாய் தர வேண்டும்", என்று மாத கடைசி என்றும் பார்க்காமல் போட்டி வைத்தாள். மேலும் தொடந்து, "போட்டி ஆரம்பம். இனி யாரும் பேச கூடாது", என்றாள்.

அமைதி நிலவியது. அடுத்த இரண்டு நிமிடத்தில் வந்தியனின் ஊர் வரப்போகிறது.

வந்தியன் ஆரம்பித்தான், "ஏய் அழகி. என்னால் இப்படி அமைதி காக்க முடியாது. என் ஊரும் வர போகிறது. நான் பேசி தோற்று விட்டேன். இந்தா வச்சுக்கோ", என்று ஒரு தாளை நீட்டினான்.

குந்தவி ஒரு வித ஆச்சர்யத்துடன், "என்ன இது 500 ரூபாய்? நான் 100 என்று தானே கூறினேன்", என்றாள்

"இந்த எழிலாடும் குழலுக்கு 100 ரூபாயில் வாங்கும் மல்லிகைப்பூ போதாது. நன்றாய் தலை நிறைய பூ வாங்கி வைத்துக்கொள் என் அழகு குந்தவி", என்று கூறி விடை பெற்றான்.

குந்தவிக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.

Monday, November 14, 2022

என் முதல் வெண்பா !

அள்ளித் தந்தது வானமோ  என்னவள்

கள்ளச் சிரிப்பைக் கண்டால் - வெறும்

கிள்ளிக் கொடுத்ததாகும் மழை.

Monday, May 10, 2021

மகளதிகாரம் - WORK_FROM_HOME

நான்: அப்பா மீட்டிங்-ல இருக்கேன்டா தங்கம்.. சத்தம் போடாதடா..

கீர்த்தன்யா: அப்பா.. சும்மா போன் தான பாத்துட்டு இருக்கீங்க.. வாங்க விளையாடலாம்..

நான்(Mindvoice):  நல்ல வேலை.. மைக் ஆன்-ல இல்ல.. 🙈🙈

Wednesday, March 18, 2020

அவள்..

அவள்..
சிரிப்பதைப் பார்த்து சிரிப்பவன்;
சிலிர்பதைப் பார்த்து சிலிர்பவன்;
மகிழ்வதைப் பார்த்து மகிழ்பவன்;
வளர்வதைப் பார்த்து வளர்பவன்;
அழுவதைப் பார்த்தும் அழுபவன்!

அவள்..
என்னாலானவள்.. இல்லை இல்லை..
நம்மாலானவள்..

அது சரி..
இதை எழுதியவன் மட்டுமே நான்..
எழுத வைத்தவள்?
இதென்ன புது கேள்வி?
இன்றும் இதை எழுத வைத்தவள் 'நீ' மட்டுமே!!




Monday, December 17, 2018

கண்ணாமூச்சி

நான் பாடும்பொழுது நீயும் பாடுகிறாயோ?
நாங்கள் பேசும் பொழுது நீயும் சேர்ந்து பேசுகிறாயோ?
நான் பார்க்காத பொழுது அசைந்தாடி கண்ணாமூச்சி ஆட்டம் கற்றுத் தருகிறாயோ?
நீ என்ன செய்தாலும் அதை எனக்காக தான் செய்கிறாய் என்று எண்ண வைக்கிறாயே!
உணர்கிறேன்.. ஆம்..
தொடும்பொழுது உணர்கிறேன்.,
உன்னைத் தொடாமலேயே..!

Wednesday, February 15, 2017

எங்கள் திருமணம்

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
எழுதியவன் கண்களில் பெருமையும்; 
எழுதவைத்தவள் கண்களில் நாணமும் ததும்பிட; 
இருவர் மனத்திலும் உவகை படர்ந்திட;
எழுதியவனும் எழுத வைத்தவளும் சேர்ந்தெழுதும் புது சகாப்தம்,
💙எங்கள் திருமணம்💙



சௌந்தர்ராஜன் - சுமிதா

ஹேவிளம்பி - வைகாசி 21 - ஞாயிறு  
4th June, Sunday, 2017 
சேஷா மஹால், ஊஞ்சலூர், ஈரோடு


"இந்நிகழ்வில் எங்களை நெகிழ வைக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்"
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜