Saturday, August 27, 2016

பொன்னியின் செல்வி :

"நான் எப்படி இருந்தால் உங்களுக்கு பிடிக்கும்?"

"பொன்னியின் செல்வி போல் வேண்டும்.."

"புரியவில்லையே!!!"

"புத்தியில் குந்தவையாய்..
வெட்கத்தில் வானதியாய்..
தைரியத்தில் பூங்குழலியாய்..
என்னை மயக்குவதில் நந்தினியாய்.."

"கடவுளே!!! 
சரி இப்போ நான் என்னவாய் வேண்டும் உங்களுக்கு?"

"நந்தினியாய் வேண்டும்"
(புன்முறுவலுடன்)

"ஆசை தோசை அப்பளம் வடை.. 
மணி பத்து ஆயிருச்சு.. தூங்கலாம் வாங்க"
(பார்.. முழுசா குந்தவையாய் மாறிய என்னவளை பார்)