Friday, October 14, 2011

கணக்கு - (0/100)


கூட்டல் வாய்ப்பாடு கூட எனக்கு மறந்து விடுகிறதே....!!!
என்னவள் முத்தங்களை எண்ணிக் கொண்டே பெறுகின்ற பொழுது.....!!!!!

Saturday, October 1, 2011

சிகப்பு..

சிகப்பு..
வறுமையின் நிறம்?
வன்முறையின் நிறம்?
ஹா.. என்னிடம் கேளுங்கள்..
.

.
சிகப்பு..
என்னவள் அன்பின் நிறம்..
என்னவள் காதல் நிறம்..
என்னவள் உதட்டின் நிறம்..
அந்த உதட்டின் அச்சு விழுந்த - என்
கன்னத்தின் நிறம்..
இது சோகத்தின் வறுமை - என் கண்களில்..
இது முத்தத்தின் வன்முறை - என் கன்னங்களில்..

Friday, September 30, 2011

கறுப்பு சிரிப்பு..



உன் முத்து சிரிப்புகளை சேமிக்கும்
வசதி மட்டும் வங்கிகளில் இருந்திருந்தால், என் கனவில் நீ சிரித்த கணக்கில் வராத அந்த கறுப்பு சிரிப்புகள் இன்று சுவிட்சர்லாந்தில் பதுங்கியிருக்கும்..

Tuesday, September 20, 2011

காத்திருக்கிறேன்..

காத்திருக்கிறேன்...
சிமிட்டிக் கொண்டே பார்க்கும் - உன்
குறும்பு பார்வைக்காக..
பார்த்துக் கொண்டே பேசும் - உன்
அக்கறை வார்த்தைக்காக..
பேசிக் கொண்டே வருடும் - உன்
அசட்டு கொஞ்சலுக்காக..
,,
கொஞ்சிக் கொண்டே...........
,,
போதும் போதும்..
இந்த வலைப்பூவும் நாணித்து விடும்
என் வரிகளைக் கண்டு....

Sunday, September 18, 2011

அன்று.. இன்று..

ஏக்கம்..


உன்னருகே இருக்கும் ஆயிரம் கண்களின் பெருமிதம்,
என்னிடத்தே இருக்கும் இரு கண்களில் தெரிகிறதே !
ஏக்கமாய்...!!

ரகசியமே..





அன்று ரசித்தேன்.. எனக்குள் ரகசியமாய்..!
இன்றும் தொடர்கிறது.. நமக்குள் ரகசியமாய்.!!

கனவே கலையாதே..




உன்னை மறக்கலாம் என்ற
இலட்ச்சிய கனவுடன் உறங்கினேன்..
அய்யோ!!!!
கனவு என் கனவை கலைத்தது...!

பார்க்காதே..





தயவு செய்து பார்க்காதே..
உன் அடுத்த பார்வைக்காக காத்திருக்கும் பொறுமை
என்னிடம் இல்லை...

காட்சி பிழை..


பார்க்கும் அனைத்திலும் உன் முகம்..
வருந்தினேன் காட்சி பிழையோ
என்று!!

சிரித்துக் கொண்டே சொன்னது உள் மனம்...,
கண்டிப்பாக உன் காதலில் பிழை இல்லை என்று..!!